தீபாவளிக்கு பிறகு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு

தீபாவளிக்கு பிறகு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தீபாவளிக்கு பிறகு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு

தீபாவளிக்கு பிறகு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித் துறையில் காலியாக இருந்த 29 தட்டச்சர் பணியிடங்கள் மற்றும் 17 சுருக்கெழுத்துத் தட்டச்சர் (நிலை-3) பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு நேற்று நேரடிக் கலந்தாய்வு மூலம் இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணைகள் வழங்கினார்.

மேலும், பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக 2,29,905 ஆசிரியர்கள் மற்றும் 29,909 ஆசிரியர் அல்லாப் பணியாளர்களின் கோரிக்கைகளை பெற ஏதுவாக "பணியாளர்களுக்கான குறைதீர் புலம்" என்ற செயலியையும் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில்  பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், மாநிலத் திட்ட இயக்குநர் மருத்துவர் மா. ஆர்த்தி கலந்து கொண்டனர்.

இததை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:

“பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித் துறையில் உள்ள பணிகளின் தற்போதைய நிலை குறித்த ஆலோசனைகள் நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழைக் காலங்களில் மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பான ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கக் கூடிய நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொது தேர்வு தேதிகள் அறிவிப்பு குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது. மேலும் தீபாவளி முடிந்தவுடன் பொதுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும்.

ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் குறித்து  முதன்மை செயலாளருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவை ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்தால், நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com