எச்சரிக்கை! மின் கட்டண குறுஞ்செய்தி பெயரில் பண மோசடி!!

மின் கட்டணம் செலுத்தக்கோரி மின் வாரியம் பெயரில் குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மின் கட்டணம் செலுத்தக்கோரி மின் வாரியம் பெயரில் குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

'மின் கட்டணம் செலுத்தாததால் உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும்' என மின் வாரியம் பெயரில் குறுஞ்செய்தி மூலமாக பண மோசடி செய்யப்படுவதாக மின் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. 

இவ்வாறு குறுஞ்செய்தி வந்தால் பதட்டம் அடைய வேண்டாம் என்றும் அந்த எண்ணை தொடர்புகொள்வதோ அதில் உள்ள லிங்கை க்ளிக் செய்வதோ வேண்டாம் என்றும் உடனடியாக 1930 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கவும் மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் மின் வாரியம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

மின்சார கட்டண செலுத்தும் மோசடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இதோ சில குறிப்புகள்: 

1. குறுஞ்செய்தி வந்த எண்ணை சரிபார்க்கவும். நம்பகமற்ற எண்ணாக இருந்தால் புறக்கணிக்கவும்.

2. செய்தியில் எழுத்து பிழைகள் இருக்கும்.

3. சைபர் பாதுகாப்பு இலச்சினையான https:// மற்றும் பூட்டு இல்லாமல் இருக்கும்.

4. தொடர்பு கொள்பவர் வேற்றுமொழி உச்சரிப்புடன் பேசுவர். 

5. சிறிய தொகையான ரூ. 10 மட்டும் செலுத்தினால் போதும் என்று கூறுவர்.

6. உடனே எச்சரிக்கையாகி புகார் அளிக்கப்படும் எனக் கூறி இணைப்பை துண்டிக்கவும்.

புகார் அளிக்க: கட்டணமில்லா தொலைபேசி 1930
இணையம்: https://cybercrime.gov.in
சமூக ஊடகம்: @tncybercrimeoff

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com