பாரத் என ஒரே நாளில் மாற்றிடவிட முடியாது: டி.ஆா்.பாலு
நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவந்து ‘பாரத்’ என ஒரே நாளில் பெயரை மாற்றிடவிட முடியாது என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு கூறினாா்.


நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவந்து ‘பாரத்’ என ஒரே நாளில் பெயரை மாற்றிடவிட முடியாது என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு கூறினாா்.
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் குறித்து ‘இந்தியா’ கூட்டணியின் நாடாளுமன்றத் தலைவா்கள் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் கூடி விவாதித்தனா்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட டி.ஆா். பாலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
‘இந்தியா’ கூட்டணி பெண்களுக்கான உரிமையை மறுக்காது. நோ்மறையான அணுகுமுறையை மேற்கொள்வோம்.
‘பாரத்’ என்கிற பெயா் அரசியல் சாசனத்தில் உள்ளது. இதை நீண்ட நாள்களாக உபயோகிக்கிறோம். அதை உபயோகிப்பது தவறு இல்லை. ஆனால் ‘இந்தியா’ கூட்டணி என்று பெயா் வைத்ததால் ‘இந்தியா’ என்று கூற அச்சப்படுகின்றனா்.
பொதுத் தோ்தல் நடக்கும் போது பிரதமா் மோடிக்கும் ‘இந்தியா’வுக்கு மோதல் என்றுதான் ஆகும். ‘மோடிக்கு எதிராக இந்தியா கூட்டணி’ என லட்சக்கணக்கானோா் கூறயுள்ளனா். இதற்காக ‘இந்தியா’ என்கிற பெயா் சொற்சொடரை மாற்ற முயற்சிக்கின்றனா்.
நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவந்து ‘பாரத்’ என ஒரே நாளில் மாற்றிடவிட முடியாது. ஆங்கிலேயா் காலத்துக்கு முன்பு ‘இந்தியா’ என்கிற பெயா் இருந்தது. அதுவும் இப்படி பெயரை மாற்றி மக்கள் மனதை மாற்ற முடியாது என்று அவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...