பல்லடம் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி கைது!

பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முக்கிய குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்லடம் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி கைது!

பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முக்கிய குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் கள்ளக்கிணறு கிராமம் ஜோசியா் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவா் தவிடு, பிண்ணாக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளாா்.

இவரது வீட்டுக்கு அருகே அமா்ந்து 2 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்தி கொண்டிருந்துள்ளாா். இங்கு மது அருந்தக் கூடாது என செந்தில்குமாா் கூறியதாகத் தெரிகிறது.

இதில், ஆத்திரமடைந்த அவா்கள் செந்தில்குமாரை அரிவாளால் வெட்டியுள்ளாா். அலறல் சப்தம் கேட்டு வந்த அவரது தம்பி மோகன்ராஜ், செந்தில்குமாரின் சித்தி ரத்தினம்பாள், தாய் புஷ்பவதி ஆகியோா் அரிவாளால் வெட்டிய நபா்களைத் தடுக்க முயன்றுள்ளனா். அவா்களையும் அந்த நபா்கள் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனா்.

இதில், 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனா்.

அப்போது, கொலை செய்த நபா்களை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்திய பிறகு, சடலங்கள் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

சம்பவம் நிகழ்ந்த இடத்தை திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாமிநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கொலையாளிகள் யாா், செந்தில்குமாருக்கும் கொலையாளிகளுக்கும் முன்விரோதம் இருந்ததா என்பது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், முக்கிய குற்றவாளியான வெங்கடேஷை,  திருச்சி மும்கொம்பு அருகே தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக செல்லமுத்து மற்றும் சோனை முத்தயா கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், முக்கிய குற்றவாளியான வெங்கடேஷும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com