மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. 

News image
Updated On :7 செப்டம்பர் 2023, 2:39 pm

DIN

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. 

சென்னை சென்ட்ரல், எழும்பூர், சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தியாகராயநகர், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம், திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. 

இதேபோன்று புறநகர்ப் பகுதிகளான பூவிருந்தவல்லி, அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயில், மதுரவாயல், நொளம்பூர், வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, செப் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் நேற்று (செப். 6) எச்சரித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.