கோப்புப்படம்
கோப்புப்படம்

விஜயலட்சுமி புகார்: சீமான் நேரில் ஆஜராக போலீசார் சம்மன்!

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று(சனிக்கிழமை) வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 
Published on

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று(சனிக்கிழமை) வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக சீமான் மீது கடந்த 2011-ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி புகார் அளித்த நிலையில், சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்தார். சீமானை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். 

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக சீமானுக்கு வளசரவாக்கம் காவல் நிலைய போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் சாலையில் உள்ள ஆர்-9 காவல் நிலையத்தில் இன்று(செப். 9) காலை 10.30 மணிக்கு ஆஜராகுமாறு சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால் வெளியூர் செல்லவேண்டி இருப்பதால் வருகிற செவ்வாய்க்கிழமை(செப். 12) ஆஜராவதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com