ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி: சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியையொட்டி பொதுமக்களுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.  
ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி: சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்
Updated on
1 min read

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியையொட்டி பொதுமக்களுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

பிரபல இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி சென்னை பனையூரில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால், அன்று பெய்த தொடர் மழை காரணமாக மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஒத்திவைப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி (இன்று)செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மேலும், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி இசை நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியையொட்டி பொதுமக்களுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில், கிழக்கு கடற்கரை சாலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால், அப்பகுதியில் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே பயண ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் நெரிசலை தவிர்க்க ஓஎன்ஆர் சாலையை பயன்படுத்தலாம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com