2024-ல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவையே காப்பாற்ற முடியும்- முதல்வர்
2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவையே காப்பாற்ற முடியும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவையே காப்பாற்ற முடியும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் சபா ராஜேந்திரன் இல்லத் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி காணொலிக் காட்சி வாயிலாக அவர் ஆற்றிய உரையில், நெய்வேலிக்கு நேரில் வர இயலாத சூழல் ஏற்பட்டு விட்டது. ஜி-20 மாநாட்டையொட்டி மாண்புமிகு குடியரசுத் தலைவர் அழைப்பின் பேரில், நேற்று தில்லி சென்றுவிட்டேன். தில்லியில் இருந்தாலும், என்னுடைய எண்ணங்கள் எல்லாம் நெய்வேலியில்தான் இருக்கிறது.
தனது தொகுதிக்குத் தேவையான திட்டங்களை கேட்டுப் பெறுவதில், சபா. ராஜேந்திரன் எப்போதுமே கண்ணும் கருத்துமாக இருப்பார். இது என்னை விட நெய்வேலி தொகுதி மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, நெல்லிக்குப்பம் தொகுதிக்கு உட்பட்ட மலட்டாறு திட்டத்தை நிறைவேற்ற வைத்தார். இதனால், அந்தச் சுற்றுவட்டாரத்தில் இருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர்
மட்டம் உயர்ந்துள்ளது.
நெல்லிக்குப்பம் புதிய பேருந்து நிலையத்தை – துணை முதல்வராக இருந்தபோது நானே நேரில் வந்து திறந்து வைத்தேன். அதுமட்டுமல்ல, தனது
சொந்த நிதியில், காசாம்பு ஏரியை தூர்வாறினார். அதை நேரில் சென்று நான் பார்வையிட்டது இப்போதும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.
இப்போது 2021-ல் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு – காடாம்புலியூர் சிட்கோ சிறு தொழில் வளாகம் கட்டப்பட்டு, மூன்று மாதம் முன்பு தான் திறந்து வைத்தேன்.
நெய்வேலியில் நகர்ப்புற திட்டத்தின்கீழ் 840 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இன்னும் ஏராளமான திட்டங்களை தன்னுடைய தொகுதிக்கு கொண்டு வர வேண்டும், மக்கள் தேவைகளை தீர்க்க வேண்டும் என்று முனைப்பாக இருக்ககூடியவர் தான் ராசேந்திரன் அவர்கள். நெய்வேலி நிறுவனத்துக்கும் தொழிலாளர்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருந்து பேச்சுவார்த்தைகளை சுமுகமாக முடிப்பவராகவும் ராசேந்திரன் செயல்பட்டு வருகிறார்.
பொதுவாக, திருமண விழாக்களில் கலந்து கொள்ளும்போது, என்னோட பேச்சின் இறுதியில், நான் ரெண்டு கோரிக்கைகள் வைப்பேன். மணமக்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்கிற முதல் கோரிக்கை.
ராஜேந்திரன் இல்லத் திருமண விழாவிலே நான் அந்தக் கோரிக்கையை வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். கண்டிப்பாக தமிழில் தான் பெயர் வைப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
அதேபோல, இன்னொரு கோரிக்கை என்னவென்றால், மணமக்கள் வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்குத் தொண்டர்களாக விளங்க வேண்டும் என்று சொல்வேன். நம்முடைய வீடு மட்டும் அல்ல, நாடும் நன்றாக இருக்க வேண்டும். அதற்காகவும் பங்களிக்க வேண்டும் என்று சொல்வேன்.
நம்முடைய நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவையே காப்பாற்ற முடியும்.
ஆகவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுவையில் இருக்கிற 40 தொகுதிகளிலும் நாம் ஜெயித்தாக வேண்டும். அப்படி முழு வெற்றியை பெற்றால்தான் அடுத்து அமையப்போகிற ஒன்றிய ஆட்சியிலும் நாம் முக்கியப் பங்காற்ற முடியும்.
நாம் எல்லோரும் சேர்ந்து உழைக்க இந்தத் திருமண விழாவில் உறுதி எடுத்துக் கொண்டு, “நாற்பதும் நமதே நாடும் நமதே” என்ற முழக்கத்துடன் விடை பெறுகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...