1000-ஆவது குடமுழுக்கு: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழாவை முன்னெடுத்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.


1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழாவை முன்னெடுத்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.
குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன.
5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு.
இன்றைய நாள், 1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத் துறை.
இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
இதற்குக் காரணமான இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபுவையும் - அதிகாரிகளையும் - அலுவலர்களையும்
பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...