நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்கள் டிக்கெட் நகலைப் பகிருங்கள்: ஏ.ஆர். ரஹ்மான்

அசாதாரண சூழ்நிலையால் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத ரசிகர்கள் டிக்கெட் நகலை அனுப்பினால் எங்கள் குழு பதில் அளிக்கும் என்று ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

அசாதாரண சூழ்நிலையால் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத ரசிகர்கள் டிக்கெட் நகலை அனுப்பினால் எங்கள் குழு பதில் அளிக்கும் என்று ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள ஆதித்யராம் பேலஸ் பகுதியில் நடக்கவிருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியான ‘மறக்குமா நெஞ்சம்’ மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், செப்.10 (நேற்று) ஞாயிறு மாலை நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, நேற்று(ஞாயிறு) சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூருக்கு அருகே நடைபெற்றது. இதற்காக வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என ரூ.2000 முதல் ரூ. 15 ஆயிரம் வரை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் இசைக்கச்சேரி நடைபெறும் இடத்திற்கு சென்றனர்.

ஆனால் சரியான பார்க்கிங் வசதி இல்லாததால் பல மணி நேர காத்திருக்குப் பின்பே ரசிகர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் சென்றுள்ளனர். ஆனால், ரூ.5,000 மதிப்புள்ள டிக்கெட் இருந்தும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு இருக்கைகள் கிடைக்கவில்லை. மேலும், கூட்டத்திற்குள் சிக்கி வெளியே வர முடியாமல் பலரும் திணறியுள்ளனர்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையான விமர்சனம் எழுப்பிய நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான ‘ஏசிடிசி ஈவண்ட்ஸ்’ ரசிகர்களிடையே மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் வீடு திரும்பிய நிகழ்வுக்கு முழு பொறுப்பையும் தாங்களே ஏற்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதன் தொடர்ச்சியாக ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அன்பான சென்னை மக்களே, இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிவிட்டு அசாதாரண சூழ்நிலையால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்கள் arr4chennai@btos.in என்ற மெயிலுக்கு உங்கள் டிக்கெட்டின் நகலை குறைகளுடன் பகிருங்கள். எங்கள் குழு விரைவில் உங்களுக்கு பதில் அளிக்கும்' என்று பதிவிட்டுள்ளார். 

Dearest Chennai Makkale, those of you who purchased tickets and weren’t able to enter owing to unfortunate circumstances, please do share a copy of your ticket purchase to arr4chennai@btos.in along with your grievances. Our team will respond asap@BToSproductions @actcevents — A.R.Rahman (@arrahman) September 11, 2023

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com