நுங்கம்பாக்கத்தில் யாரைத் தேடுகிறது அமலாக்கத்துறை?

சென்னை நுங்கம்பாக்கத்தில் கைப்பேசியில் இருக்கும் புகைப்படத்தைக் காண்பித்து வீடு வீடாகச் சென்று அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறார்கள்.
நுங்கம்பாக்கத்தில் யாரைத் தேடுகிறது அமலாக்கத்துறை?
நுங்கம்பாக்கத்தில் யாரைத் தேடுகிறது அமலாக்கத்துறை?
Published on
Updated on
1 min read


சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் கைப்பேசியில் இருக்கும் புகைப்படத்தைக் காண்பித்து வீடு வீடாகச் சென்று அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறார்கள்.

நுங்கம்பாக்கத்தில் முக்கிய சாலைகளில் இருக்கும் கடைகள் மற்றும் சாலையோரக் கடைகளை நடத்தி வருபவர்களிடம், கைப்பேசியில் இருக்கும் புகைப்படத்தைக் காண்பித்து, இவர்களைத் தெரியுமா என்றும், தெருவில் செல்வோரிடமும் இவர்களைத் தெரியுமா என்றும் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் செந்தில்பாலாஜிக்குத் தொடர்புடைய  பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை அண்ணா நகரில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் சென்னையில் நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணா நகர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளிலும் திருச்சி, கோவை, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொழில் ரீதியான தொடர்புடையவர்கள் ஆடிட்டர் சண்முகராஜ் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதில், நுங்கம்பாக்கத்தில், உரிய நபரின் வீடு தெரியாமல், வீடு வீடாகச் சென்று, கைப்பேசியில் இருக்கும் புகைப்படத்தைக் காண்பித்து இவரை தெரியுமா என்று ஒரு சில அமலாக்கத் துறை அதிகாரிகள் வீட்டில் வசிப்போரிடம் கேட்டதும், சாலையோரக் கடைக்காரர்களிடமும் விவரங்களை விசாரித்து வருவது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே ஒரு தனியார் நிறுவத்துடன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அண்ணா நகரில் வசித்து வரும் ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டில் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது அவரது அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும்  ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை மேலாளர் விக்டர் மற்றும் முகப்பேரில் உள்ள பொதுப்பணித்துறையைச் சேர்ந்த திலகம் என்கிற பொறியாளர் வீட்டிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது.

இது மட்டுமல்லாமல் தென் மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இன்றுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு 90 நாள்கள் நிறைவு பெற்றுள்ளன.  தற்போது ஜாமீன் மனு விசாரணைக்கு உள்ள நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அதில் கிடைக்கும் ஆவணங்களின் அடிப்படையில் மற்ற இடங்களிலும் சோதனை நடத்துவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com