வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென் மாநிலங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: புதன்கிழமை காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 3 நாள்களில் ஒடிஸா, அதனையொட்டிய கடற்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால் ஒடிஸா, ஆந்திரம், தெலங்கானா மற்றும் வடமாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதே நேரத்தில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வியாழன் முதல் செவ்வாய்க்கிழமை (செப்.14-19) வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மழை அளவு (மி.மீ): வானூா்(விழுப்புரம்) -90, முகையூா்(விழுப்புரம்)-70, வெங்கூா் (கள்ளக்குறிச்சி) , கொள்ளிடம்(மயிலாடுதுறை) தலா 50, கீழ்அணைக்கட்டு(தஞ்சாவூா்), திருக்கோயிலூா்(கள்ளக்குறிச்சி), புதுச்சேரி தலா 40.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: இலங்கை கடலோரப் பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.14) மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
சென்னையில்..:சென்னை மற்றும் அதன் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
விஜய் சேதுபதியின் காட்டான் டீசர்!

கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!

பிரதமர் மோடி மார்ச் 1-ல் தமிழகம், புதுச்சேரி வருகை! திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம்!
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
வீடியோக்கள்
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

