நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நேரில் ஆஜராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இரண்டாவது முறையாக போலீஸ் சம்மன் வழங்கியுள்ளது.
தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக சீமான் மீது கடந்த 2011-ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி புகார் அளித்த நிலையில், சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்தார். சீமானை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு செப்டம்பர் 9-ஆம் தேதி நேரில் ஆஜராக வளசரவாக்கம் காவல் நிலைய போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பிய நிலையில், வெளியூர் செல்வதால் செவ்வாய்க்கிழமை(செப்.12) ஆஜராவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், விசாரணைக்கு சீமான் ஆஜராகமல் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி சீமானின் இரண்டு கடிதத்தை கொடுத்து விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள சீமானின் வீட்டுக்கு இன்று நேரில் சென்ற வளசரவாக்கம் போலீசார், சீமானை நேரில் சந்தித்து காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன் வழங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வருகின்ற 18-ஆம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


