தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாமக்கல்லில் ‘ஷவா்மா’ சாப்பிட்ட 14 வயது மாணவி பலி: போலீசார் விசாரணை

நாமக்கல்லில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில் ‘ஷவா்மா’ சாப்பிட்ட பள்ளி மாணவி திங்கள்கிழமை காலை உயிரிழந்தார்.

News image

நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள தனியாா் அசைவ உணவகம்

Updated On :18 செப்டம்பர் 2023, 8:18 am

DIN

நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில் ‘ஷவா்மா’ சாப்பிட்ட பள்ளி மாணவி திங்கள்கிழமை காலை உயிரிழந்தார்.

நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள தனியாா் அசைவ உணவகத்தில் சனிக்கிழமை இரவு ஷவா்மா, பிரியாணி உள்ளிட்ட பல்வேறு அசைவ உணவுகளை சாப்பிட்ட பொதுமக்கள் சிலருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 

இந்த நிலையில் அந்த தனியார் அசைவ உணவகத்தில் சாப்பிட்ட நாமக்கல் ஏ எஸ்.பேட்டையைச் சேர்ந்த தவமணி- சரோஜா தம்பதியின் மகள் கலையரசி (14) என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு, வாந்தி, பேதி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. 

இதையடுத்து, கலையரசி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிற்கு வந்து தூங்கியவர் திங்கள்கிழமை காலை உயிரிழந்தார்.  

Story image

அதே உணவகத்தில் ஷவா்மா, பிரியாணி உள்ளிட்ட பல்வேறு அசைவ உணவுகளை சாப்பிட்ட நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவிகள் 13 பேருக்கு  வாந்தி, பேதி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உடல் நலம் தேறினா் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அசைவ உணவகத்தில் ஆட்சியா், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அங்கிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான அசைவ உணவுகளைக் கைப்பற்றி அழித்தனா்.

நாமக்கல்லைச் சோ்ந்த உணவக உரிமையாளா் நவீன்குமாரிடம் விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்புத் துறையினா் நோட்டீஸ் அளித்தனா். பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட உணவுகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதன்பிறகு, சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ‘சீல்’ வைத்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.