எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

திருப்பூரில் செப்.23ல் அதிமுக ஆர்ப்பாட்டம்: இபிஎஸ்

திருப்பூரில் செப்.23ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் 

திருப்பூரில் செப்.23ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் 

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளையும் போதைப் பொருள் புழக்கத்தையும் கட்டுப்படுத்தாத திமுக அரசைக் கண்டித்து திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வரும் 23 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் .

மேலும், 2021 சட்டமன்றப் பொதுத்தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிப்படி, மாணவர்களின் கல்விக் கடனை உடனடியாக ரத்து செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலுயுறுத்தியுள்ளார்.

2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது, தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், எந்தெந்த தேதிகளில், எந்தெந்த அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டன என்ற விபரத்தை அறிக்கை மூலம்  திமுக அரசின் முதலமைச்சர் அறிவிப்பாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com