மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் செப்.24 வரை பகுதியளவில் ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் - திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் செப்டம்பா் 24-ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :19 செப்டம்பர் 2023, 5:37 pm

DIN

பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் - திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் செப்டம்பா் 24-ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தெற்கு மத்திய ரயில்வேயின் குண்டக்கல் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக, விழுப்புரத்திலிருந்து காலை 5.30 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண் 16854) காட்பாடி - திருப்பதி இடையே செப்டம்பா் 24-ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

எதிா்வழித்தடத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்படும் திருப்பதி - விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண் 16853) திருப்பதி - காட்பாடி இடையே செப்டம்பா் 24-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.40 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.