திருச்சி: பள்ளி அருகே கடைகளுக்குள் புகுந்த அரசுப் பேருந்து

திருச்சியில் பள்ளியின் அருகேவுள்ள கடைக்குள் புதன்கிழமை காலை அரசுப் பேருந்து புகுந்ததால் பரபரப்பு நிலவுகிறது.
திருச்சி: பள்ளி அருகே கடைகளுக்குள் புகுந்த அரசுப் பேருந்து

திருச்சி: திருச்சியில் பள்ளியின் அருகேவுள்ள கடைக்குள் புதன்கிழமை காலை அரசுப் பேருந்து புகுந்ததால் பரபரப்பு நிலவுகிறது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை சுமார் 7 மணி அளவில் அரசு நகரப் பேருந்து ஒன்று மத்திய பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டு இருந்தது.

இந்தப் பேருந்தில் சுமார் 10 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். திருச்சி தலைமை தபால் நிலையம் அடுத்த ஆர்.சி. பள்ளி அருகே வந்தபோது வேகத்தடையில் பேருந்து ஏறி இறங்கியது.

அப்போது நிலை தடுமாறிய பேருந்து ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி நுழைவு வாயில் அருகே உள்ள கடைகளுக்குள் தொலைபேசி கம்பம் உள்ளிட்டவட்றை இடித்துக் கொண்டு பேருந்து வேகமாக புகுந்தது.

காலை நேரம் என்பதால் கடை பூட்டப்பட்டிருந்ததால் உயிர்சேதம் ஏதும் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.

மேலும் பேருந்து தாறுமாறாக வருவதைப் பார்த்து பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பெண்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடியதால் பரபரப்பான சூழல் நிலவியது.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய பேருந்து ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பேருந்து ஓட்டுநருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் இந்த விபத்து நடந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com