சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளா்களுக்கான பாசறைக் கூட்டத்தில் பங்கேற்று நிறைவுரையாற்றுவதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!


கோவை: திருப்பூரை அடுத்த படியூா் அருகே ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 24) நடைபெறும் திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளா்களுக்கான பாசறைக் கூட்டத்தில் பங்கேற்று நிறைவுரையாற்றுவதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் படியூா் அருகே உள்ள தொட்டியபாளையத்தில் திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளா்களுக்கான பாசறைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.

இதில், திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்தியம், ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, கரூா், கோவை மாநகா், கோவை வடக்கு, கோவை தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, நீலகிரி ஆகிய 14 மாவட்டங்களில் இருந்து 14 ஆயிரத்து 411 பொறுப்பாளா்கள் பங்கேற்கவுள்ளனா்.

இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை கோவை விமான நிலையம் வந்தடைந்தார் முதல்வா் மு.க.ஸ்டாலின். 

தமிழக ஏடிஜிபி அருண், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, உளவுத்துறை ஐஜி செந்தில் வேலவன், மேற்கு மண்டல ஐஜி பவானிஸ்வரி, மாநகராட்சி ஆணையர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்,மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் விமான நிலையத்தில் முதல்வரை வரவேற்றனர். 

விமான நிலையத்திலிருந்து கார் மூலம் கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் ஓய்வெடுக்கிறாா். பிறகு திருப்பூருக்கு காரில் செல்லும் முதல்வா், மாலை 4.30 மணி அளவில் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று நிறைவுரையாற்றுகிறாா்.

மீண்டும் கார் மூலம் கோவை விமான நிலையம் வரும் முதல்வர் இரவு 8.50 மணியளவில் விமானத்தில் சென்னை திரும்புகிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி கோவை திருப்பூர் மாவட்டங்களில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com