தமிழக மீனவர்கள் 4 பேர் மீது இலங்கை கடற்கொள்ளைர்கள் தாக்குதல்
நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.











