சாலையில் திரியும் மாடுகள்: ரூ.10 ஆயிரம் வரை அபராதம்
சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ரூ.10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்றக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ரூ.10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி முதல்முறை மாடு பிடிபட்டால் இதுநாள் வரை ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இனி ரூ 5,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் அதே மாடு பிடிபட்டால் உரிமையாளருக்கு ரூ 10 ஆயிரம் அபராதம் விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 9 மாதங்களில் சென்னையில் 3,468 மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதமாக ரூ.65.80 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

