தமிழகத்துக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க உத்தரவு!
தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை அக்.15 வரை திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை அக்.15 வரை திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
கடந்த செப். 18 ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில்கூட தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 5,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால் தங்களிடம் போதிய நீர் இருப்பு இல்லை என்று கூறி கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றமும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை செயல்படுத்தக் கூறியது.
படிக்க: 12 ராசிக்கான வாரப்பலன்கள்!
கடந்த செப்.26ஆம் தேதி நடைபெற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்திலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று பிற்பகல் தொடங்கியது. இதில் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
12,500 கனஅடி நீர் திறந்துவிடக் கோரிய நிலையில், தமிழகத்துக்கு அக்டோபர் 15 வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே திறந்துவிடப்படும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...