
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
2001 முதல் 2006 வரை அதிமுகவில் அமைச்சராக இருந்தவர் அன்வர் ராஜா. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி எம்.பி.யாகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
கடந்த ஆண்டு சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து ஆங்கில ஊடகங்களுக்கு அன்வர் ராஜா பேட்டியளித்திருந்தார். அதோடு மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கருத்துகளையும் முன்வைத்து வந்தார். அதனைத் தொடர்ந்து எந்தவொரு அரசியல் பணிகளிலும் ஈடுபடாமல் இருந்துவந்தார். இதனால், 2021ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டார்.
தற்போது சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் அன்வர் ராஜா இணையவுள்ளார்.
அதிமுகவிலிருந்து பிரிந்து செல்பவர்கள் மன்னிப்புக்கடிதம் கொடுத்தால் அவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ளத் தயாராக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மன்னிப்புக் கடிதம் கொடுத்து மீண்டும் அதிமுகவில் அன்வர் ராஜா இணைந்தார்.
சென்னை பசுமைவழிச்சலையிலுள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு அன்வர் ராஜா சென்றுள்ளார். அங்கு அவரை சந்தித்துப் பேசி, அதிமுகவில் இணைந்தார்.
அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவில் அன்வர் ராஜா மீண்டும் இணைந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.