
அன்வர் ராஜா
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
அதனைத் தொடர்ந்து சென்னை பசுமைவழிச்சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வர் ராஜா, கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும், கடந்த ஓராண்டாக கட்சிப்பணி ஆற்றிக்கொண்டுதான் இருந்தேன். கட்சி உறுப்பினர்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டேன். என்னை யாரும் தடுக்கவில்லை.
படிக்க | அதிமுகவில் மீண்டும் இணைகிறார் அன்வர் ராஜா!
எல்லாருடனும் ஒத்து வாழ்பவனே உயிர் வாழ்பவன், மற்றவர் இறந்தவர்களுள் வைக்கப்படுவார்கள் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
அதிமுக மாபெரும் இயக்கம். சிறிய சறுக்கலிலிருந்து மீண்டு மறுபடியும் அதிமுகவில் இணைந்துள்ளேன். கட்சியின் கொள்கைகளுக்கு உட்பட்டு கட்சியின் வளர்ச்சிக்கு மீண்டும் களப்பணி ஆற்றுவேன்.
ஒரு கட்சியை மற்றொரு கட்சி விமர்சிப்பது வேறு, கூட்டணி வேறு. இந்தியாவில் காங்கிரஸ் கட்சியைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளன எனக் குறிப்பிட்டார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...