கருணாநிதி நினைவு நாள்: நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ஆவது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  
கருணாநிதி நினைவு நாள்: நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ஆவது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது. 

மேலும் பேரணியில் அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். பேரணியில் ஏராளமான தி.மு.க.வினர் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர். பேரணி மெரினாவை அடைந்ததும் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். முன்னதாக சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திலும் முதல்வர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 1 கி.மீ. தூரம் அமைதிப் பேரணியாக சென்று கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com