கோவை பேரூரில் நொய்யல் பெருவிழா: ஆளுநர் தொடங்கி வைத்தார்

கோவையில் பேரூர் ஆதீனத்தின் சார்பில் நடத்தப்படும் 7 நாள் நொய்யல் பெருவிழாவை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
பேரூர் ஆதீனத்தின் சார்பில் நடத்தப்படும் 7 நாள் நொய்யல் பெருவிழாவை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த தமிழக ஆளுநர் ஆர். என். ரவி.
பேரூர் ஆதீனத்தின் சார்பில் நடத்தப்படும் 7 நாள் நொய்யல் பெருவிழாவை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த தமிழக ஆளுநர் ஆர். என். ரவி.
Updated on
1 min read

கோவை: கோவையில் பேரூர் ஆதீனத்தின் சார்பில் நடத்தப்படும் 7 நாள் நொய்யல் பெருவிழாவை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சாா்பில் நதிகளுக்காக விழா எடுக்கப்படிடப வருகிறார்கள். அந்த வகையில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, காவிரி உற்பத்தியாகக் கூடிய குடகு முதல் காவேரிபூம்பட்டினம் வரை ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் யாத்திரை சென்று பொதுமக்களிடையே நீா் மேலாண்மை, நீரைத் தூய்மையாக வைப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

காவிரி புஷ்கரணி, மகா மகத்தின்போது நதிகளுக்குப் பெருவிழா எடுத்தோம். அதைத்தொடா்ந்து, தென்பெண்ணை, பாலாறு, தாமிரவருணி, வைகை ஆகிய தமிழக நதிகளுக்கும், வடஇந்தியாவில் பிரம்மபுத்திரா, சிந்து, கங்கை போன்ற பல நதிகளுக்கும் பெருவிழா எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு பாலாற்றில் ஐந்து நாட்கள் பெருவிழா நடத்தப்பட்டது

கோவை பேரூர் ஆதீனத்தின் சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

அதேபோல, நொய்யல் ஆறு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏழு நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிறுவா்கள், கல்லூரி மாணவா்களிடையே நொய்யல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

நொய்யல் பெருவிழா ஆகஸ்ட் 25 முதல் 31-ஆம் தேதி வரை ஏழு நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பேரூர் ஆதீனத்தின் சார்பில் நடத்தப்படும் 7 நாள் நொய்யல் பெருவிழாவை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் இரு கருத்தரங்குகள், அதிகாலையில் வேள்விகள் நடைபெறும். மாலையில் கங்கையில் நடைபெறுவதுபோல ஏழு மேடைகள் அமைக்கப்பட்டு ஏழு ஆரத்திகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com