விழுப்புரம்: சந்திரயான்- 3 திட்ட இயக்குநரின் தந்தைக்கு நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணன் புதன்கிழமை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
உலக நாடுகளே இந்தியாவை வியந்து பாா்க்கும் வகையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்- 3 திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி சாதித்துக் காட்டியுள்ளனா். சந்திரயான்- 3 திட்ட இயக்குநராகப் பணியாற்றி வருபவா் விழுப்புரத்தைச் சோ்ந்த பி.வீரமுத்துவேல்.
இந்த நிலையில் சந்திரயான்- 3 திட்ட இயக்குநர் பி.வீரமுத்துவேலிடம் தங்கள் மகன் திட்ட இயக்குநராக இருந்து செயல்படுத்திய சந்திரயான்- 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன்மூலம், உலகளவில் இந்தியாவுக்கு பெருமை கிட்டியுள்ளது. அதில், தங்கள் மகனின் பங்கு அளப்பரியது என்று அனைத்து தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்தி வருகின்றனர்.
வீரமுத்துவேலிடம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசியபோதுகூட, தமிழகத்துக்கு வரும்போது நேரில் வந்து சந்திப்பதாகத் தெரிவித்துள்ளாா்.
இந்த நிலையில், விழுப்புரத்தில் உள்ள சந்திரயான் - 3 திட்ட இயக்குநர் பி. வீரமுத்துவேலுவின் தந்தை பி.பழனிவேல்-தாய் ரமணி ஆகியோரை நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணன் புதன்கிழமை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
அப்போது, நாட்டிற்கு பெருமைத் தேடி தந்த மகனை பெற்ற நீங்கள் நீண்ட ஆயுளோடு அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்வதாக சத்தியநாராயணன் தெரிவித்தார். அப்போது, ரஜினி மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மியான்மரில் முன்னாள் அதிபர் உள்பட 4,500 கைதிகள் விடுதலை!

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு!
பாஜகவுக்கு ஆதரவளிக்கும் தொகுதி மறுவரையறைக் குழு நியாயமற்றது: ஜோதிமணி எம்.பி.

ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


