உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!தவெக 6 மாத ஆட்சியில் 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ரூ. 1.14 லட்சம் கோடி முதலீடுகள்தமிழக காவல்துறை அதிரடி: 3 நாள்களில் 1,049 ரௌடிகள் கைதுதென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது!8 நாள்களில் ரூ. 1,000 கோடி வசூலித்த ராமாயணா!தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய உதயநிதி ஸ்டாலின் மனு: இன்று தீா்ப்புஅரசுப் பள்ளிகளில் இன்று குழந்தைகள் தின கொண்டாட்டம்: மாணவா்களுக்கு கேக் வழங்குகிறாா் முதல்வா் விஜய்இந்தியாவின் ரஷிய எரிபொருள் இறக்குமதி: அக்டோபரில் ரூ.67,000 கோடியாக அதிகரிப்புபிகாரிலிருந்து சென்னைக்கு நவ. 17-இல் சிறப்பு ரயில்நவ.19-க்கு பிறகு வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புதைவானை முந்திய இந்தியப் பங்குச் சந்தை: ரூ.508 லட்சம் கோடி மதிப்புடன் உலக அளவில் 5-ஆவது இடம்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 3% குறைவு!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Updated On :

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு இயல்பை விட 3 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது. 

வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 1-ம் தேதி தொடங்கிய நிலையில், டிசம்பர் 7 இன்று வரை 384.5 மி.மீ மழைப் பதிவாக வேண்டிய நிலையில் 371.9 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பிலிருந்து 3 சதவீதம் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த டிச. 3-ம் தேதி வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் வலுப்பெற்று நெல்லூர்-மசூலிப்பட்டினம் அருகே டிச. 5-ல் அதி தீவிர புயலாக கரையை கடந்தது. 

மிக்ஜம் புயல் தீவிரமடைந்ததன் காரணமாக தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஒரு சில மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது, வீடுகளில் மழை நீர் புகுந்தது, மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன, மின்சாரம் தடை என பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

புயல் கடந்து மூன்று நாள்கள் ஆகியும் வெள்ளம் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.