டோக்கன் மூலம் ஒருவாரத்தில் வெள்ள நிவாரணம்: உதயநிதி

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருவாரத்தில் நிவாரண நிதி வழங்கப்படும் என விளையாட்டு நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
உதயநிதி ஸ்டாலின் (கோப்புப் படம்)
உதயநிதி ஸ்டாலின் (கோப்புப் படம்)


புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருவாரத்தில் நிவாரண நிதி வழங்கப்படும் என விளையாட்டு நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண நிதியாக குடும்பத்துக்கு ரூ.6,000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

சென்னை மெளலிவாக்கத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வாரத்துக்குள் டோக்கன் கொடுக்கப்பட்டு நிவாரணத் தொகை வழங்கப்படும்.

எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கத்தான் செய்வர்கள். பேரிடர் காலங்களில் நாம் நம் வேலையைச் சேய்ய வேண்டும். 

சிலபகுதிகளில் ரேஷன் கடைகளிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அவை சரி செய்யப்பட்டு ரேஷன் கடைகள் மூலம் விரைவில் டோக்கன் வழங்கப்படும். 

50 ஆண்டுகளில் பெய்யாத மழை தற்போது பெய்துள்ளது. மிக்ஜம் புயலால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் முதல் தன்னார்வலர்கள் வரை பலரும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என உதயநிதி குறிப்பிட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com