கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

புரட்சிக் கலைஞர், கேப்டன் விஜயகாந்த் அரசியல் பயணம்!

முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே பால்விலை தொடர்பாகவும் இடைத்தேர்தல் தொடர்பாகவும் அனல் பரப்பும் விவாதம் நடைபெற்றது. அதோடு, அதிமுகவுடனான கூட்டணியும் முறிவுற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2023, 4:26 am

DIN

சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக, புரட்சிக் கலைஞர் என்றும் கேப்டன் என்று மக்களாலும், கட்சியினராலும் அழைக்கப்பட்ட விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம்,அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள ராமானுசபுரம் என்கிற சிற்றூரில் 1952 ஆகஸ்ட் 25-இல் பிறந்தார். பிறகு அவரது குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்தது. அங்கு தந்தையின் அரிசி ஆலையில் உடன் உதவி வந்தார். அவருக்கு சிறு வயதில் இருந்தே திரைத்துறையின் மீது ஆர்வம் இருந்தது. அதனால், சென்னைக்கு வந்து கடும் முயற்சிக்குப் பிறகு நடிகரானார். 

1979-இல் இனிக்கும் இளமை படத்தின் மூலம் அறிமுகமாகி, 100-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயனாக நடித்துள்ளார். திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார். அவர் நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் வெளிநாடுகளில் நட்சத்திர நிகழ்ச்சி நடத்தி நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தார்.

அரசியல் பாதை: பிறகு, அரசியல் பக்கம் விஜயகாந்த் கவனம் செலுத்தத் தொடங்கினார். 1993-இல் உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த் ரசிகர்கள் பலர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். அது அவருக்கு நம்பிக்கையை அளித்து, அரசியலில் உத்வேகம் எடுக்க வைத்தது.

2005 செப்டம்பர் 14-இல் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கினார்.2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது. விருத்தாசலம் தொகுதியில் மட்டும் விஜயகாந்த் வெற்றிபெற்றார்.  2011-இல் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவோடு விஜயகாந்த் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ரிஷிவந்தியம் தொகுதியிலில் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவரோடு 41 தேமுதிகவினரும் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குச் சென்றனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 

Story image

இந்தக் காலகட்டத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே பால்விலை தொடர்பாகவும் இடைத்தேர்தல் தொடர்பாகவும் அனல் பரப்பும் விவாதம் நடைபெற்றது. அதோடு, அதிமுகவுடனான கூட்டணியும் முறிவுற்றது.

Story image

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் சார்பில் விஜயகாந்த் முதல்வராக வேட்பாளராக முன்மொழியப்பட்டு தேர்தலைச் சந்தித்தார். ஆனால், அந்தத் தேர்தலில் விஜயகாந்த் உள்பட கூட்டணிக் கட்சிகளும் அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தனர்.

2021-இல் தேர்தலில் தேமுதிக சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு, அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது.

இந்தத் தேர்தலுக்கு முன்பிருந்தே விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை(டிச.28) உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பிரேமலதா என்ற மனைவியும், விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என்கிற மகனும் உள்ளனர். அவரின் உடலில் சாலிக்கிராமத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

அவரது மறைவுக்கு அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.