ஈரோடு கிழக்கு: இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்தார் ஓபிஎஸ்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளரை ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
செந்தில்முருகன்
செந்தில்முருகன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளரை ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருப்பதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதியில் செந்தில் முருகன் போட்டியிடுவார்.  வேட்பாளர் செந்தில்முருகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் எங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவோம். இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆவணப்படி இன்று வரை அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை சந்தித்து ஆதரவு கேட்பேன். இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கு எக்காலத்திலும் தடையாக இருக்க மாட்டேன் என்று ஓபிஎஸ் தெரிவித்தார்,

காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா திடீர் மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளராக திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஏற்கனவே, ஈரோட்டில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த கே.எஸ்.தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக வேட்பாளர் அறிவிப்பை அரசியல் கட்சிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று காலை அதிமுக  அறிவிக்கப்பட்டுள்ளார்.  ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக இதுவரை தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com