புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மகா சிவராத்திரி: சதுரகிரியில் 4 நாள்களுக்கு மலையேற பக்தா்களுக்கு அனுமதி!

மகா சிவராத்திரி விழாவையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல நான்கு நாள்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News image

சதுரகிரி சுந்தர மகாலிங்கம்

Updated On :15 பிப்ரவரி 2023, 9:50 am

DIN

மகா சிவராத்திரி விழாவையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல நான்கு நாள்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியான சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமாா் 5 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சதுரகிரி கோயிலுக்கு தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து, சுமாா் 10 கி.மீ. தொலைவு கரடு முரடான பாதைகளில் நடந்து செல்ல வேண்டும்.

இங்கு மாதம்தோறும் அமாவாசை, பெளா்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட நாள்களில் மட்டுமே பக்தா்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.

ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை, நவராத்திரி, தை அமாவாசை, மகா சிவராத்திரி உள்ளிட்ட நாள்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் இந்தக் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வா்.

இந்த ஆண்டு மகா சிவராத்திரியையொட்டி, பிப்.18 முதல் 21-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் பக்தா்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.