உக்ரைனுக்கு கூடுதலாக ரூ. 45 ஆயிரம் கோடி நிதியுதவி : ஜப்பான் அறிவிப்பு

உக்ரைனுக்கு கூடுதலாக 5.5 பில்லியன் டாலர்(45 ஆயிரம் கோடி ரூபாய்) நிதி வழங்க முடிவு செய்துள்ளதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். 
உக்ரைனுக்கு கூடுதலாக ரூ. 45 ஆயிரம் கோடி நிதியுதவி : ஜப்பான் அறிவிப்பு

உக்ரைனுக்கு கூடுதலாக 5.5 பில்லியன் டாலர்(45 ஆயிரம் கோடி ரூபாய்) நிதி வழங்க முடிவு செய்துள்ளதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் நேட்டோ(NATO) படையில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. கடந்த  பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய போர் ஓராண்டை எட்டியுள்ளது.

இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பல வகைகளில் உதவி வருகின்றன. மேலும் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. 

இந்நிலையில் ஜப்பான் ஏற்கெனவே உக்ரைனுக்கு உதவி வரும் நிலையில், மேலும் 5.5 பில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் 45 ஆயிரம் கோடி ரூபாய்) நிதி வழங்க முடிவு செய்துள்ளது. ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இதனை அறிவித்துள்ளார். 

அந்நாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர், போரினால் வாழ்வாதாரங்கள் இழந்த மக்களுக்கு இன்னும் உதவ வேண்டிய அவசியம் உள்ளது. அங்கு அழிக்கப்பட்ட உள்கட்டமைப்பை மீட்டெடுக்க வேண்டும். அதனால் 5.5 பில்லியன் டாலர் கூடுதல் நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளோம்' என்று கூறியுள்ளார். 

முன்னதாக, உக்ரைனுக்கு 600 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி, நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் மதிப்பிலான மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளதாக ஜப்பான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் உக்ரைன் போர் ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி உக்ரைன் அதிபர் வெலோதிமீர் ஸெலென்ஸ்கியுடன் ஜி7 நாடுகளின் கூட்டம் காணொலி வழியாக நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். 

வருகிற மே மாதம் ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 நாட்டுத் தலைவர்கள் கூட்டத்திற்கு ஜப்பான் தலைமை தாங்கவுள்ள நிலையில், உக்ரைனுக்கு ஜப்பான் ஆதரவு தெரிவிக்கும் என்றும் சட்டத்தின் அடிப்படையில் ஒரு சுதந்திரமான, சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான உலகின் முயற்சிகளை ஜப்பான் வழிநடத்தும் என்றும் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com