தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
தில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.
2021-22-ஆம் ஆண்டு தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் தில்லி அரசின் கலால் துறை இலாகாவுக்கு பொறுப்பு வகித்த மணீஷ் சிசோடியாவின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகளால் கடந்த ஆண்டு சோதனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணையும் நடைபெற்றது. மூன்று மாதங்களுக்கு முன்பாக இதுகுறித்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியளவில் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. முன்னதாக அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இன்று(திங்கள்கிழமை) அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை தீவிர விசாரணைக்கு உட்படுத்தும் வகையில் காவலில் எடுக்க சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் போர் தற்காலிக நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்பு

முத்து என்கிற காட்டான் இணையத் தொடரில் விஜே பார்வதி போஸ்டர்!
லீடர் வெளியீட்டுத் தேதி!

இம்பாக்ட் வீரர் விதி எனக்கு பிடிக்கவில்லை: அக்ஷர் படேல்
வீடியோக்கள்

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

