ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் 10ம் நாளான ஞாயிற்றுக்கிழமை மூலஸ்தானத்தில் இருந்து மோகினி அலங்காரம் என்கிற நாச்சியார் திருக்கோலத்தில் ஸ்ரீ நம்பெருமாள் எழுந்தருளினார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு திங்கள்கிழமை (ஜனவரி 2) நடைபெறவுள்ளது.

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாவான வைகுந்த ஏகாதசி பெருவிழாவானது பகல்பத்து, இராப்பத்து, இயற்பா சாற்றுமுறை என 21 நாள்கள் நடைபெறும். பகல்பத்து விழாவின் 9 ஆம் நாளான சனிக்கிழமை நம்பெருமாள் முத்துப் பாண்டியன் கொண்டை, முத்து கா்ணபத்ரம்,முத்து அபயஹஸ்தம், முத்துச்சரம், முத்து திருவடி, முத்தங்கி அணிந்து முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பகல்பத்தின் 10 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் (நாச்சியாா் திருக்கோலம்) பகல்பத்து மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தார்.

பின்னா் இராப்பத்து விழாவின் முதல் நாளான திங்கள்கிழமை வைகுந்த ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு அதிகாலை 4.45 மணிக்கு நடைபெறுகிறது. விழாவையொட்டி ஸ்ரீரங்கம் மின்னொளியால் விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாகதசி பகல் பத்து 8-ம் நாளான வெள்ளிக்கிழமை அர்ச்சுன மண்டபத்தில் முத்து குறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஸ்ரீ நம்பெருமாள் காட்சியளித்தார்.

சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வருகிற 2-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் மா.பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் கட்டணமில்லா தரிசனம் செய்யும் பக்தா்களுக்காக மேற்கூரை, அமரும் இருக்கைகள், மின் விசிறி, குடிநீா் வசதியுடன் கூடிய நிரந்தர பிரம்மாண்ட கூடாரம் ஆகியவை ரூ. 67.5 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

பக்தர்கள் வரிசையாக அமர மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 800 பக்தா்கள் அமரும் வகையில் இருக்கைகள், குடிநீா், மின் விசிறி வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இதுபோல கட்டண தரிசனத்தில் வரும் பக்தா்களுக்கான ரூ. 42 லட்சம் மதிப்புள்ள 350 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெஞ்சுகள் போடப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் படத்தின் முதல் பாடல்!

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 291 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க உத்வேகம் அளித்த சத்யராஜ்... விஜய் நேர்காணல் -4!

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



