ஈரோட்டில் உலக அமைதி தின வேள்வி!

உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் ஈரோடு மனவளக்கலை மன்றம் சார்பில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு உலக அமைதி தின வேள்வி ஈரோடு அறிவுத்திருக்கோயிலில் நடைபெற்றது.
ஈரோட்டில் உலக அமைதி தின வேள்வி!
Published on
Updated on
1 min read

உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் ஈரோடு மனவளக்கலை மன்றம் சார்பில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு உலக அமைதி தின வேள்வி ஈரோடு அறிவுத்திருக்கோயிலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் லலிதா இறைவணக்கம் பாடினார். உலக சமுதாய சேவா சங்கத் தலைவா் பத்மஸ்ரீ மயிலானந்தன் வேள்வியைத் துவக்கி வைத்து பேசுகையில், புத்தாண்டு அன்று நாம் ஒவ்வொருவரும் குறிக்கோள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். 

இந்தப் புத்தாண்டில் நாம் அனைவரும் பிறரைப்பற்றி சிந்திக்காமல் நம்மைப்பற்றி சிந்தித்து, நமது குறைகளை கவனித்து நமது ஒழுக்கத்தை நல்லொழுக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கும் சுயநலம், வெறுப்பு, கோபம் ஒரு மனிதனுக்குஇருந்தால் மனதில் அமைதி இருக்காது என்று பல மகான்கள்கூறியிருக்கிறார்கள். மிருகங்களை விட மேலான சிந்தனை மனிதனுக்கு மட்டுமே உண்டு. அதனால்தான் தேர்ந்தெடுத்து, திட்டமிட்டு தன்னை மேம்படுத்துவதற்கான தன்மை இறைவனால் மட்டுமே மனிதனுக்கு கொடுக்கப்பட்டது. அன்பு தான் ஆண்டவன், பூரண அமைதிதான் மோட்சத்திற்கு வழி , என்றார்.

இந்நிகழ்ச்சியில் வேதாத்தரி பதிப்பகம்  இயக்குநர் சதாசிவம்,  மனவளக்கலை மன்ற செயலாளர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com