அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி: செவிலியர்கள் போராட்டம் தொடரும்!

அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி: செவிலியர்கள் போராட்டம் தொடரும்!

மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் கரோனா தொற்று அதிகரித்ததையடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு தமிழகத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தற்காலிக முறையில் ஒப்பந்த செவிலியா்களாக நியமிக்கப்பட்டனா். 

கரோனா காலத்தில் பணியில் சேர்க்கப்பட்ட 6,000 ஒப்பந்த செவிலியர்களில் 3,000 பேருக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 3,000 பேருக்கு பணிக்கால ஒப்பந்தம் முடிவடைந்ததை தொடர்ந்து பணி நீட்டிப்பு இல்லை என தமிழக அரசு கடந்த வாரம் ஆணை வெளியிட்டது. இதற்கு ஒப்பந்த செவிலியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து மருத்துவத்துறை அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

தொடர்ந்து, செவிலியர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் இன்று மாலை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாகவும், ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் தொடரும் என்றும் செவிலியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com