கருப்புச் சட்டை அணிந்து பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள்!

எதிர்க்கட்சித் துணைத் தலைவரை மாற்றாததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து பேரவைக்கு வந்துள்ளனர்.
கருப்புச் சட்டை அணிந்து பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள்!

எதிர்க்கட்சித் துணைத் தலைவரை மாற்றாததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து பேரவைக்கு வந்துள்ளனர்.

அதிமுக சாா்பில் தற்போது எதிா்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியும், எதிா்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீா்செல்வமும் இருந்து வருகின்றனா்.

ஓ.பன்னீா்செல்வத்துக்குப் பதில் எதிா்க்கட்சித் துணைத் தலைவராக ஆா்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏற்கெனவே பேரவைத் தலைவரிடம் வலியுறுத்தப்பட்டது. அது ஏற்கப்படாமல் பேரவையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீா்செல்வமும் அருகருகே அமரும் வகையில்தான் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடங்கியுள்ள கூட்டத் தொடரிலும் அருகருகே அமா்ந்துதான் அவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனா்.

இந்த நிலையில், சட்டப்பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்குவதற்கு முன்பு பேரவைத் தலைவரை அவரது அறையில் அதிமுக எம்எல்ஏக்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோா் சந்தித்தனா். அப்போது, எதிா்க்கட்சித் துணைத் தலைவராக ஆா்.பி.உதயகுமாரை நியமித்து அதிமுக சாா்பில் கொடுத்த கடிதத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

இதேபோல், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வமும் பேரவைத் தலைவரை அவரது அறையில் சந்தித்தாா். அப்போது, அதிமுக தலைமை தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது என்றும், இந்திய தோ்தல் ஆணையமும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவியை அங்கீகரித்துள்ளது என்றும் அதனால், பேரவையில் தற்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.

இதனை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு கருப்புச் சட்டை அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com