
நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் குறைவால் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக நீா்வளத்துறை அமைச்சராகவும், திமுக பொதுச் செயலாளராகவும் உள்ள துரைமுருகன்(வயது 84) சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிக்க | அலட்சியத்தின் உச்சம்: பெங்களூருவில் 54 பயணிகளை ஏற்றிச் செல்லாமல் பறந்த விமானம்!
இந்நிலையில், இன்று நடைபெறும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் துரைமுருகன் கலந்து கொள்ளமாட்டார்.
கடந்த டிசம்பர் 24-ஆம் காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...