கலைஞரிடம் கற்றுக்கொண்ட பாடம்.. பேரவையில் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி

அயராது உழைக்க வேண்டும் என்பதையே கலைஞரிடம் கற்றுக்கொண்ட பாடம் என சட்டப்பேரவையில் உரையாற்றும்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 
கலைஞரிடம் கற்றுக்கொண்ட பாடம்.. பேரவையில் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி


அயராது உழைக்க வேண்டும் என்பதையே கலைஞரிடம் கற்றுக்கொண்ட பாடம் என சட்டப்பேரவையில் உரையாற்றும்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு பதிலுரை வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின், பல்வேறு மேற்கோள்களைக் காட்டி பேசினார். 

அப்போது, முதல்வராக தன்னை தேர்வு செய்த தமிழக மக்களுக்காக அயராது உழைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் கற்றுக்கொண்ட பாடம் என்ன உழைக்கத் தூண்டுகிறது எனவும் தெரிவித்தார். 

மக்களால் தேர்வான ஆட்சியின் மாண்பை காக்கவும் ஆட்சியின் வலிமையை உணர்த்தவும் எனது சக்தியை மீறி செயல்படுவேன் என்றும்,  இரவு தூக்கம் மட்டுமே எனது ஓய்வு நேரமாக இருக்கிறது.

இதுவரை 3,346 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு 86 சதவிகிதம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களை பின்னுக்குத்தள்ளி தமிழ்நாடு முதலிடத்துக்கு வந்தது சாதாரண விஷயமல்ல என முதல்வர் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com