

கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு ஒரே மாதிரியான கட்டண நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் மிக முக்கியமான இடம் கொடைக்கானல். இங்கு குணா குகை, தூண் பாறை, பைன் மரக் காடுகள், மோயர் சதுக்கம், கொடைக்கானல் ஏரி உள்ளிட்ட பல இடங்கள் உள்ளன. இங்கு ஒவ்வொரு இடங்களுக்கும் ஒவ்வொரு நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒரே கட்டணமாக மாற்றப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் பெரியவர்களுக்கு ரூ. 30, சிறியவர்களுக்கு ரூ. 15 என்ற அடிப்படையில் வனத்துறை கட்டணம் நிர்ணயித்துள்ளது.
இதையும் படிக்க | பள்ளிகளுக்கு புதன்கிழமை(ஜன. 18) விடுமுறையா? - அமைச்சர் பதில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.