
கொலை செய்யப்பட்ட முதியவர் பெருமாள்
காஞ்சிபுரம் அருகே கோளிவாக்கம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதியவர் ஒருவரை கொலை செய்தது தொடர்பாக ஆட்டோ ஓட்டுரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் அருகே கோளிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெருமாள்(70) இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரரான ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் மதன் என்பவருக்கும் அடிக்கடி பொதுப்பாதை தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவ நாளன்றும் தகராறு ஏற்பட்டதால் மதன் பெருமாளின் மீது கல்லைத் தூக்கிப் போட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படிக்க: சனிப்பெயர்ச்சி யாருக்கு கைகொடுக்கும்! என்ன சொல்கிறார் ஜோதிடர்?
தகவலறிந்து காஞ்சிபுரம் எஸ்பி எம்.சுதாகர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் பெருமாளின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கொலைக்கு காரணமான மதனை காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஐயங்கார்குளம் கிராமப்பகுதியில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.