ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் போட்டியிட விரும்புவோர் திங்கள்கிழமை முதல் விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையும் படிக்க | இடைத்தேர்தல்: தமாகா சார்பில் தேர்தல் பணிக்குழு அமைப்பு
இதனை முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிட விருப்புகின்ற கழக உறுப்பினர்கள் அதிமுக தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் திங்கள்கிழமை (ஜன.23) முதல் வியாழக்கிழமை (ஜன.26) ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, விண்ணப்பக் கட்டணத் தொகையாக ரூ.15,000 செலுத்தி, விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களை பெற்று, கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து உடனடியாக அளிக்கலாம் என கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதர்வா - கயாது லோஹரின் இதயம் முரளி படத்தின் ரிலீஸ் தேதி!

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

டென்டா வாட்டர் அண்ட் இன்ஃப்ரா சொல்யூஷன்ஸ் லாபம் 33% சரிவு!

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



