ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு வெற்றிவாய்ப்பை ஏற்படுத்த தமாகா சார்பில் தேர்தல் பணிக்குழுவை அமைத்து அக்கட்சியின் தலைவர் ஜிகே.வாசன் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி ஈரோடு மத்திய மாவட்ட தமாகா தலைவர் விஜயகுமார் தலைமையில் 16 பேர் கொண்ட குழுவை அவர் அமைத்துள்ளார். அந்த குழுவில் விடியல் சேகர், யுவராஜா, ஆறுமுகம், சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-இல் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில் கடந்த முறை அதிமுக கூட்டணி சாா்பில் தமாகா போட்டியிட்டு தோல்வி அடைந்தது. இடைத்தோ்தலிலும் தமாகா போட்டியிடுமா என்கிற கேள்வி இருந்து வந்தது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் தலைமையிலான குழுவினா் ஜி.கே.வாசனை வியாழக்கிழமை (ஜன. 19) சந்தித்து, அங்கு அதிமுக போட்டியிட வேண்டிய நிலை குறித்து தெரிவித்தனா்.
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுகவுக்காக ஜிகே வாசன் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



