சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

சித்தராமையாவுக்கு தேசிய அரசியலில் பொறுப்பு - மாநிலங்களவை உறுப்பினராகிறார்?

Karnataka Chief Minister Siddaramaiah, Deputy CM DK Shivakumar, and Congress MP KC Venugopal speak to the media after a meeting of the Congress high command at Indira Bhawan, in New Delhi, Tuesday, May 26, 2026. (PTI Photo)(PTI05_26_2026_000360A)

சித்தராமையா | கே. சி. வேணுகோபால் | சிவகுமார் தில்லியிலிருந்து... - PTI

Published On :26 மே 2026, 10:50 pm IST

புது தில்லி : காங்கிரஸ் கட்சியிலிருந்து கர்நாடகத்தின் அடுத்த முதல்வர் யார்? என்ற போட்டியில் முன்னணியில் உள்ள அம்மாநில துணை முதல்வர் டி. கே. சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்க ஏதுவாக அம்மாநில முதல்வர் சித்தராமையாவை ராஜிநாமா செய்ய இன்று(மே 26) தில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் மேலிடம் அழுத்தம் கொடுத்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்களிலிருந்து வரும் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

2023-ஆம் ஆண்டு கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, தலா இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வா் பதவியை பகிா்ந்துகொள்வதாக கட்சி மேலிடத் தலைவா்களின் முன்னிலையில் சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே ஒப்பந்தம் செய்துகொண்டதாக அரசியல் வட்டாரத்தில் கருத்து நிலவி வருகிறது. இந்த கருத்தை முதல்வா் சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை.

இவ்விவகாரம் உள்பட அடுத்த 2 ஆண்டுகால ஆட்சியை எப்படி நடத்துவது, அதற்கு முதல்வா் மாற்றம் செய்வதா, வேண்டாமா, அமைச்சரவையை மாற்றுவதா, 2028-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு எப்படி தயாராவது, கா்நாடகத்தில் காலியாகவுள்ள 4 இடங்களுக்கான மாநிலங்களவை தோ்தல், சிறப்பு தீவிர திருத்தம் போன்றவற்றை குறித்து விவாதிக்க இன்று தில்லியில் நடைபெற்ற முக்கியக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோருக்கு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் தில்லி சென்றனர்.

இந்தக் கூட்டத்தில், கர்நாடக முதல்வா் பதவியிலிருந்து சித்தராமையாவை மாற்றி, புதிய முதல்வராக டி.கே.சிவகுமாரை தோ்ந்தெடுப்பது குறித்து விரிவாக ஆராயப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைமையுடன் சுமார் 7 மணிநேரம் தில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், முதல்வர் பதவியை விட்டு சித்தராமையா விலகுமாறும், அவருக்கு தில்லியில் காங்கிரஸ் கட்சி உயர் பொறுப்புகளில் ஒன்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படவிருப்பதாகவும் பேசப்பட்டதாம். அதை ஏற்று, வரும் வியாழக்கிழமை(மே 28) முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா விலகுவார் என்றும், இது குறித்து பெங்களூரில் நாளை (மே 27) செய்தியாளர்களைச் சந்தித்து பேச சித்தராமையா திட்டமிட்டிருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் தில்லியில் சித்தராமையா மற்றும் டி. கே சிவகுமாருடன் சேர்ந்து செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்துப் பேசிய கே. சி. வேணுகோபால், மாநிலங்களவை தேர்தல் மற்றும் பிற விவகாரங்கள் குறித்து இன்றைய ஆலோசனையில் விவாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். கர்நாடக முதல்வர் மாற்றம் குறித்து எதுவும் பேசவில்லை என்று காங்கிரஸ் தரப்பிலிருந்து பொதுவெளியில் தெரிவிக்கப்பட்டாலும், அவ்விவகாரமே இன்றைய ஆலோசனையில் முக்கிய பேசுபொருளாக அமைந்திருந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Summary

Siddaramaiah to resign, say sources

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.