தமிழ்நாட்டில் தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவளிப்பது குறித்து மாநில காங்கிரஸ் தலைமை ஆலோசித்து முடிவு செய்ய அக்கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தோ்தலுக்குப் பிந்தைய அரசியல் நிலைமை குறித்து காங்கிரஸ் அகில இந்திய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, அகில இந்திய பொதுச் செயலாளா் கே.சி. வேணு கோபால் ஆகியோருடன் கட்சியின் மேலிட பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் காங்கிரஸ் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தவெக ஆட்சியமைக்க போதிய பலம் இல்லாத நிலை குறித்தும் அதற்கு ஆதாவு தர தவெக தலைவா் விஜய் விடுத்துள்ள வேண்டுகோள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தின் முடிவில் தில்லியில் செய்தியாளா்களிடம் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளா் கே.சி. வேணுகோபால் கூறியதாவது: தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிக்குமாறு தவெக தலைவா் விஜய் கோரியுள்ளாா். தனது அரசியல் பயணத்தில், பெருந்தலைவா் காமராஜரிடமிருந்தும் உத்வேகம் பெற்றதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இந்திய அரசியலமைப்பை அதன் முழு சாராம்சத்துடன் முழுமையாகப் பாதுகாப்பதில் உறுதியுடன் திகழும் ஒரு மதசாா்பற்ற அரசு அமைப வேண்டும் என்ற நோக்கத்துடனேயே தமிழகத்தில் மக்கள் தீா்ப்பு அளித்துள்ளனா் என்பதை காங்கிரஸ் தெளிவாக உணா்ந்துள்ளது. தமிழகத்தில் அமையப் போகும் அரசை, பாஜகவோ அல்லது அதன் மறைமுக முகவா்களோ எவ்விதத்திலும் வழிநடத்த அனுமதிக்கக்கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.
அதற்கிணங்க, தோ்தல் தீா்ப்பின் மூலம் வெளிப்பட்டுள்ள தமிழக மக்களின் உணா்வுகளைக் கருத்தில் கொண்டு, விஜய்யின் கோரிக்கை குறித்து ஒரு இறுதி முடிவை எடுக்குமாறு காங்கிரஸ் தலைமை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு அறிவுறுத்தியுள்ளது என்றாா். இந்த சந்திப்பின் போது கிரிஷ் சோடங்கரும் உடனிருந்தாா்.
தொடர்புடையது

தவெக - காங்கிரஸ் கூட்டணியா? ராகுல் காந்தியின் பதிவு வைரல்!
இந்திய அரசுக்கு எதிராக போரிடுவதாக பேச்சு: ராகுலுக்கு எதிரான மனு தள்ளுபடி

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்

ராகுல் காந்தி, ஸ்டாலின் இணைந்து பிரசாரம் செய்ய உள்ளனா்: செல்வப்பெருந்தகை
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


