விடைத்தாள் மதிப்பீடு இணையதளம் ஹேக் செய்யப்பட்டதாக வெளிவந்த செய்திக்கு அந்த யூஆர்எல் வேறு என்றும், உண்மையான யூஆர்எல் ஹேக் செய்யப்படவில்லை எனவும் சிபிஎஸ்இ செவ்வாய்க்கிழமை (மே 26) விளக்கம் அளித்துள்ளது.
12 ஆம் வகுப்பு படித்த மாணவர், பொழுதுபோக்குக்காக சிபிஎஸ்இ தளத்தை முடக்க முயன்றதாகவும், அப்போது அதில் பல பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்ததாகவும் அதனை சிஇஆர்டி-க்கு மின்னஞ்சலில் அனுப்பியதாகவும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இது சமூக ஊடகங்களில் தீவிரமாக பரவி வருகின்றது.
இது குறித்து சிபிஎஸ்இ, தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
சமூக ஊடகத்தில் ஒரு பயனர் வெளியிட்ட பதிவில், http://cbse.onmarks.co.in என்ற இணையதள முகவரியைக் கொண்ட சிபிஎஸ்இ திரைவழி மதிப்பிடல் (OSM) தளத்தை கடந்த பிப்.26 அன்று ஹேக் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு சில செய்தி மற்றும் கட்டுரைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தப்படுவது என்னவென்றால், விடைத்தாள்களை மதிப்பீடு செய்யப் பயன்படுத்தப்பட்ட இணையதளம் வேறு ஒரு URL-ஐக் கொண்டிருந்தது. அந்த URL ஹேக் செய்யப்படவோ அல்லது குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகளையோ கொண்டிருக்கவில்லை. http://cbse.onmark.co.in என்ற URL சோதனை மற்றும் மறுஆய்வு நோக்கங்களுக்காக மாதிரித் தரவுகளைக் கொண்ட ஒரு சோதனைத் தளம் மட்டுமே.
அந்த இணையதளத்தில் உண்மையான மதிப்பீட்டுத் தரவுகள், மதிப்பெண்கள் அல்லது பிற தரவுகள் எதுவும் இல்லை. உண்மையான மதிப்பீட்டுப் பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட இணையதளத்தில் எந்தப் பாதுகாப்பு மீறல்களும் வெளிவரவில்லை என்பதை சிபிஎஸ்இ வலியுறுத்துகிறது.
மேலும், உண்மையில் பயன்படுத்தப்படும் இந்தத் தளத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சிபிஎஸ்இ உறுதியளிக்கிறது எனத் தெரிவித்தது.

சிபிஎஸ்இ தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கம் - படம் - எக்ஸ் (சிபிஎஸ்இ)
Clarification Regarding Claim of Compromise of CBSE OSM Portal
— CBSE HQ (@cbseindia29) May 26, 2026
In a post made by a user on social media, it has been claimed that the CBSE On Screen Marking (OSM) bearing URL: https://t.co/cuLrvsxzOH was compromised by him on 26.02.2026. This has also formed the basis for a fewâ¦
Summary
Responding to reports that its answer sheet evaluation website had been hacked, the CBSE clarified on Tuesday that the URL in question was a different one.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்ன கொடுமை? மறுமதிப்பீடு கோராத சிபிஎஸ்இ மாணவர்கள் மதிப்பெண் குறைந்து ஃபெயில் ஆன பரிதாபம்!

சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் சரிபார்ப்பு, மறுமதிப்பீட்டு முடிவுகள் வெளியீடு!

சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம்: அவகாசம் நீட்டிப்பு!








