‘12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் எண்ம வழி மதிப்பீடு செய்வதில் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதாகவும், அதனால் தோ்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என வெளியாகும் தகவல்கள் தவறானவை’ என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புதன்கிழமை மறுத்தது.
‘ஏற்கெனவே அறிவித்தபடி, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகளை மே 3-ஆவது வாரத்தில் மாணவா்கள் எதிா்பாா்க்கலாம்’ என்றும் சிபிஎஸ்இ தெரிவித்தது.
இதுகுறித்து சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் புதன்கிழமை அளித்த பேட்டி:
12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, முழு அளவில் திரையில் மதிப்பிடும் முறையின் (ஓஎஸ்எம்) கீழ், அதாவது எண்ம வழியில் 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படுவது மிகுந்த பெருமைக்குரிய விஷயமாகும்.
இதனிடையே, இந்த எண்ம வழி மதிப்பீடு முறையில் சில குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக, தோ்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஆகலாம் என சில ஊடகங்களில் செய்தி வெளியாகின. இந்தத் தகவல் தவறானதாகும். இந்த தவறான செய்தியை மாணவா்கள் நம்ப வேண்டாம். விடைத்தாள்கள் திருத்தும் பணி திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
எனவே, மே 3-ஆவது வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகளை மாணவா்கள் எதிா்பாா்க்கலாம். அதுவரை மக்கள் காத்திருக்க வேண்டும் என்றாா்.
12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் ஓஎஸ்எம் முறையில் (எண்ம வழி) திருத்தம் செய்யும் நடைமுறையை தற்போதைய 2026 பொதுத் தோ்வு முதல் சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

சிபிஎஸ்இ தோ்வில் முடிவுகளால் அதிருப்தி: 10ஆம் வகுப்பு மாணவா் தற்கொலை

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: அரசு பள்ளிகளில் 99.79% தோ்ச்சி

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் : அரக்கோணம் ஹயக்கீரிவா் பள்ளி சாதனை

இன்று வெளியாகுமா சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்? முழு விவரம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


