ஆளுநரின் தேநீர் விருந்து: திமுக பங்கேற்குமா?

குடியரசு நாளையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக, காங்கிரஸ், மதிமுக,  கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

குடியரசு நாளையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக, காங்கிரஸ், மதிமுக,  கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளது. ஆளுநர்  தேநீர் விருந்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

ஒவ்வொரு வருடமும் குடியரசு நாள் விழாவில் ஆளுநர் மாளிகையில் அனைத்து கட்சியினருக்கும் தேநீர் விருந்து அளிப்பது மரபு. குடியரசு நாளன்று மாலை 4.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறவுள்ளது. ஆளுநரின் தேநீர் விருந்தில் பகேற்க அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுருந்தது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில், "குடியரசு நாள் ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிக்கிறது. “தமிழ்நாடு ஆளுநர்” என்று அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தாலும், அவர் தன் அரசியல் அமைப்புச் சட்ட கடமைகளை நிறைவேற்றவில்லை. தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து அவர் ஆர்எஸ்எஸ் சார்பு கருத்துக்களையே பேசி வருகின்றார். எனவே, அவர் அழைப்பு விடுத்துள்ள தேநீர் விருந்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு புறக்கணிக்கின்றது." என தெரிவித்துள்ளது. 

இதேபோல மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “ஆளுநர் தொடர்ந்து தமிழ்நாட்டிர்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அவர் பதவி விலக வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில் அவர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. எனவே புறக்கணிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்பது குறித்து திமுக நாளை ஆலோசித்து முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com