திருவண்ணாமலை கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் இன்று சுவாமி தரிசனம் செய்தார். 
திருவண்ணாமலை கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் இன்று சுவாமி தரிசனம் செய்தார். 

பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் இன்று வருகை தந்தார். அவரை கோயில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதையயுடன் உற்சாகமாக வரவேற்றனர். 

தற்போது ரஜினிகாந்த் லால்சலாம் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு ரஜினி திருவண்ணாமலை சென்றுள்ளார். 

கடந்த சில தினங்களாகவே அவரைக் காண ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையாரை வழிபாடு செய்துள்ளார். 

சனிப் பிரதோஷமான இன்று அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக அவர் தெரிவித்தார். 

கோயிலில் அவரை பார்த்த ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளக் குவிந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com