தமிழக - கேரள எல்லை வனப்பகுதியில் போராட்டம்: 19 விவசாயிகள் கைது!

தேனி மாவட்டம் அருகே தமிழக - கேரள எல்லை வனப்பகுதியில் 3 நாட்கள் தங்கி விவசாயம் செய்ய அனுமதிக்குமாறு போராட்டம் நடத்திய 20 விவசாயிகளை போலீசார் புதன்கிழமை கைது செய்தனர்.
3 நாட்கள் வனப்பகுதியில் தங்கியிருந்த விவசாயிகளிடம் கோட்டாட்சியர் பால்பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தி அழைத்து வந்தார்.
3 நாட்கள் வனப்பகுதியில் தங்கியிருந்த விவசாயிகளிடம் கோட்டாட்சியர் பால்பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தி அழைத்து வந்தார்.

கம்பம்: தேனி மாவட்டம் அருகே தமிழக - கேரள எல்லை வனப்பகுதியில் 3 நாட்கள் தங்கி விவசாயம் செய்ய அனுமதிக்குமாறு போராட்டம் நடத்திய 20 விவசாயிகளை போலீசார் புதன்கிழமை கைது செய்தனர்.

தேனி மாவட்டம் அருகே தமிழக- கேரள எல்லை அமராவதபுரம், ஆசாரிபள்ளம் ஆகிய பகுதிகளில் 70 ஆண்டுகளாக விவசாயம் செய்ததை மீண்டும் அனுமதிக்குமாறு ஆண், பெண் என 25 பேர் ஞாயிற்றுக்கிழமை வனப்பகுதிக்கு சென்று டெண்ட் அமைத்து தங்கினர். மாவட்ட வன அலுவலர் சமர்த்தா திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக வனப்பகுதியில் கொட்டும் மழையிலும் தங்கியிருந்தனர். புதன்கிழமை உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டியன் தலைமையில் காவல், வருவாய் மற்றும் வனத்துறையினர் சென்று வெளியேறுமாறு கூறினர். நீதிமன்ற உத்தரவு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். அதற்கு வனத்துறையினர், உத்தரவு தபால் மூலம் தங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் நேரடியாக சென்ற கோட்டாட்சியர் பால்பாண்டியன் வனத்துறையினரிடம் 'உயர்நீதிமன்றம் 3 வார காலத்திற்குள் இந்த விவசாயிகளுக்கு வனத்துறை தகுந்த முகாந்திரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை தொடருங்கள்' என்றார்.

பின்னர் அங்கிருந்த விவசாயிகளிடம் 3 வார காலத்திற்குள் வனத்துறை உங்களுக்கு பதில் கூற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே அதன்பின்னர் மற்ற முடிவுகளை எடுக்கலாம், தற்போதைக்கு வனப்பகுதியை விட்டு வெளியேறுங்கள் என்று கூறினார். அதன்பேரில் விவசாயிகள் வெளியேறினர்.

வன அலுவலகம் முற்றுகை: அமராவதிபுரம், ஆசாரி பள்ளம் ஆகிய பகுதிகளில் வெளியேறிய விவசாயிகள் லோயர்கேம்ப்பில் உள்ள கூடலூர் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி வனப்பகுதிக்குச் சென்றோம். தற்போது எங்கள் மீது என்ன வழக்கு பதிவு செய்யப் போகிறீர்கள் என்று கூறி முழக்கமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வை செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை, வனத்துறையினர் அனுமதிக்க மறுத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com